கோத்தபாய ராஜபக்சவின் ஆணையின் கீழ் உருவாக்கப்படும் அரசாங்கம் மக்கள் ஆணைக்கு எதிரானது என ஜேவியின் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டினால் மீள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஜனாதிபதி உடனடியாக பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுகின்றனர் இதனால் ஜனாதிபதி தலைமையிலான எந்த அரசாங்கத்திற்கும் மக்கள் ஆதரவு கிடைக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான அரசாங்கத்தினால் ஒரு மாதம் கூட நீடிக்கமுடியாது என தெரிவித்துள்ள அவர் தனியொருவர் குடும்பத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தற்போது அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய தலைமையில் உருவாக்கப்படும் எந்த அரசாங்கமும் மக்களின் ஆணைக்கு எதிரானது- ஜேவிபி 
 
        Reviewed by Editor
        on 
        
May 12, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
May 12, 2022
 
        Rating: 
 