சீனத்தூதுவரை ஏன் சஜித் பிரேமதாசா சந்தித்தார்?

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhon மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (11) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதன்போது இலங்கை தற்போது எதிர்கொள்ளும் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, இந்தப்பேரழிவு தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவத்தின் பிரகாரம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

வெளிப்படைத்தன்மையுடன் நாட்டை ஆட்சி செய்தல்,இலஞ்சம்,ஊழல் மற்றும் அடக்குமுறைகள் ஒழிப்பு என்பனவே தனது நிர்வாகத்தில் முதன்மையான அம்சமாக இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.

இலங்கையை தற்போதைய நிலையில் இருந்து மீட்கும் முகமாக சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் தலையிடுமாறும் தூதுவரிடம் அவர் கோரிக்கையும் விடுத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் கலந்து கொண்டார்.



சீனத்தூதுவரை ஏன் சஜித் பிரேமதாசா சந்தித்தார்? சீனத்தூதுவரை ஏன் சஜித் பிரேமதாசா சந்தித்தார்? Reviewed by Editor on May 11, 2022 Rating: 5