இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிபிசி தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து நாளை (12) காலை 07 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் களமிறக்கப்பட்ட போதிலும் பல பகுதிகளில் அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் பதற்றமான சூழ்நிலைகளும் பதிவாகி வருகின்றன.
இலங்கை ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள வேளையில், CPC இன் எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
Reviewed by Editor
on
May 11, 2022
Rating:
