பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூடும் பாராளுமன்றம், பிரதமரின் விசேட என்னவாக இருக்கும்??

இம்மாத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (04) புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்  ஆரம்பமாகவுள்ளது. 

ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இன்றைய தினம் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

எதிர்வரும் நாட்களின் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஆரம்பாகியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.




பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூடும் பாராளுமன்றம், பிரதமரின் விசேட என்னவாக இருக்கும்?? பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூடும் பாராளுமன்றம், பிரதமரின் விசேட என்னவாக இருக்கும்?? Reviewed by Editor on May 04, 2022 Rating: 5