உணவு பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து எதிர்வருகின்ற காலங்களில் நாடும் நாமும் எதிர்கொள்ளவிருக்கும் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நாடளாவிய  ரீதியில் உணவு பாதுகாப்பு தொடர்பான  தேசிய வேலைத்திட்டம் இன்று (23) திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.அஹமட் சாபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு திராய்க்கேணி தென்னம் தோப்பில் நடைபெற்றது.

உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமை பீட உத்தியோகத்தர், விவசாய திணைக்கள அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டு தோட்ட பயிர் செய்கை பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பயிர் மர கன்றுகள், விதை பக்கற்றுக்கள் மற்றும் மரவெள்ளி கிழங்கு கம்புகள் என பயனாளிகளுக்கு இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



உணவு பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் உணவு பாதுகாப்பு  தொடர்பான தேசிய வேலைத்திட்டம் Reviewed by Editor on May 23, 2022 Rating: 5