எரிபொருள் நிரப்பு நிலையங்களை தவிர்த்து ஏனைய மூன்றாம் நபர்களிடம் இருந்து பெற்றோல் உள்ளிட்ட எரிபொருளை வாங்க வேண்டாம் என்று, எரிசக்தி அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேவைக்கு அதிகமாக எரிபொருள் சேகரிப்பில் ஈடுபடும் நபர்கள், அதில் கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்வாறான வியாபாரங்களை ஊக்குவிக்க வேண்டாம் என அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் குறித்து தெரிவிக்குமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் செய்தியில் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மூன்றாம் நபர்களிடம் பெற்றோல் வாங்க வேண்டாம் - எரிசக்தி அமைச்சர்
Reviewed by Editor
on
May 23, 2022
Rating:
