லக்கி கழக வீரர் ஷக்கிப் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு தெரிவு

அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகத்தின் கடின பந்து கிரிக்கெட் வீரர் ஜே.எம்.ஷக்கிப்  அம்பாரை மாவட்ட 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் ஜே.எம்.ஷக்கிப்  லக்கி விளையாட்டுக் கழகத்தின் மூன்றாம் நிலை துடுப்பாட்ட வீரராக தனது திறமையை தொடர்ந்தும் நிருபித்து வருகின்றார்.

16 வயதுடைய ஜே.எம்.ஷக்கிப் கிரிக்கெட் விளையாட்டில் இளம் வயதிலிருந்தே ஆர்வமுள்ளவராக  இருந்துள்ளதுடன்  கொழும்பு டி. எஸ் சேனாநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்ற காலங்களில் கடின பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

சிறப்பான, எடுப்பான துடுப்பாட்ட வீரராக காணப்படும் ஷக்கிப் சிறந்த விக்கெட் காப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.

லக்கி விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.எம்.அரூஸ் கருத்து தெரிவிக்கையில்,

லக்கி விளையாட்டுக் கழகம் இவரது திறமையை இனம்கண்டு சிரேஷ்ட அணியில் வாய்ப்பை வழங்கியதுடன் பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தோம்.

அட்டாளச்சேனை தேசிய பாடசாலையில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக பணியாற்றிவரும் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் றஸ்பாஸ் அவர்கள் கடின பந்து கிரிக்கெட்டை ஆரம்பித்து வைத்ததுடன் சிறந்த பயிற்சிகளையும் வழங்கியுள்ளார். 

அவரது பயிற்றுவிப்பின் கீழ் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. அதில் நமது வீரர் ஜே.எம்.ஷக்கிப்  சிறப்பாக விளையாடி கூடுதலான ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், விக்கட் காப்பில் சிறந்த பிடிகளையும் எடுத்துள்ளார்.

மாவட்ட 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் விளையாடும் அம்பாரை மாவட்ட அணிக்கான தேர்விலும் ஷக்கிப்பை பங்கு பற்றச் செய்து கிழக்கு மாகான மற்றும் அம்பாரை மாவட்ட  பயிற்சியாளர்களின் கவனத்தையும் ஈர்த்துக்கொள்ள காரணமாக இருந்தவர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் றஸ்பாஸ் அவர்களாகும். அவருக்கு எமது கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அந்த வகையில் அம்பாறை மாவட்ட 19 வயதுக்குட்பட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 13 வீரர்களில் ஷக்கிப் உள்வாங்கப்பட்டுள்ளார்.

மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி அம்பாறை மாவட்டத்தை வெற்றியின் பக்கத்திற்கு கொண்டு செல்வதுடன், தனது ஊருக்கும் கல்லி கற்கும் பாடசாலைக்கும் தான் விளையாடும் லக்கி விளையாட்டுக் கழகத்திற்கும் பெருமை சேர்ப்பார் என திடமாக நம்புகின்றேன் என்று கழகத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.




லக்கி கழக வீரர் ஷக்கிப் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு தெரிவு லக்கி கழக வீரர் ஷக்கிப் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு தெரிவு Reviewed by Editor on May 08, 2022 Rating: 5