(சியாத்.எம்.இஸ்மாயில்)
அட்டாளைச்சேனை அல் முனீரா பெண்கள் உயர் பாடசாலையில் வித்தியாரம்ப விழா பிரதி அதிபர் ஓ.எல்.எம். றிஸ்வான் தலைமையில் இன்று (05) வியாழக்கிழமை நடைபெற்றது.
"அகரம் தொடங்கும் ஆனந்த விழா எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவுக்கு, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.அம்ஜத்கான், அதிபர் ஏ.சீ.நியாஸ் பிரதம அதிதிகளாகவும், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர், PSI இணைப்பாளர் ஏ.எல்.எம்.யூசூப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் பிரதி அதிபர்களான ஏ.கே.எம். அனிஸ், எம்.ஏ. ஸூஹைறா, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஹாசிம் விசேட அதிதிகளாகவும் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிகள், பெற்றோர்கள் உட்பட கலந்து கொண்டதுடன் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
