கட்டிட நிர்மாணத்துறையின் மத்திய கிழக்கு நாடுகளுக்குள்ளான நகர்வுகள்

Sri Lankan QS களுக்கு எப்போதுமே மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் கிராக்கியுள்ளதை நாம் அறிவோம். மொறட்டுவை பல்கலைக்கழக QS பட்டதாரிகளுக்கும் இதர சர்வதேச மற்றும் உள்நாட்டுத்தகைமைகளுக்கும் அங்கு எப்போதுமே சிறந்த வரவேற்பு உண்டு. 

எமது பிரதேசத்தவர்கள் இவ்விக்கட்டான பொருளாதார சுமைகளிலிருந்தும் ஓரளவு தப்பித்திருப்பதற்கு  இறைவனின் உதவியுடன் இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம். 

ஒரு காலத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொடிகட்டிப்பறந்த  QS  தொழில்வாய்ப்பு சிறிது காலத்தின் பின்னர் Qatar இன் பக்கம் திரும்பியது இதனால் Dubai   போன்ற    UAE மாநிலங்களில் தொழில் புரிந்த பலர் அங்கே பணிபுரிய அங்குள்ள சிலரும், புதிதாக எமது நாட்டிலிருந்து பலரும் Qatar நோக்கிப் பயணமானார்கள். 

Qatar  தற்போது FIFA 2022 இற்கு தயாராகி வருவதால் அங்குள்ள சில Construction Company  களின் Project கள் ஓரளவுக்கு நிறைவு பெற்றுள்ளதாலும் மேலும் FIFA World Cup Zone இல் உள்ள ஒரு சில Project கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாலும் கட்டிட நிர்மாணபணியாளர்களின் தேவை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதெனலாம்.(இருந்தும் இப்போதும் புதிய தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை, மேலும் FIFA World Cup இன் பின்னர் மீண்டும் தேவை அதிகரிக்கலாம்). 

ஆனால் Saudi Arabia  விற்கான கட்டிட நிர்மாணத்துறைசார் தொழில்வாய்ப்புக்கள் கணிசமான அளவு அதிகரித்து வரக்கூடியதை காணக்கூடியதாக உள்ளது. Saudi அரசாங்கமானது     Vision 2030 என்ற கருத்திட்டத்தில் தனது நகரங்களை Dubai   போன்ற பிரசித்திமிக்க நகரங்களாக மாற்றுவதற்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில்  Red Sea Projects   போன்ற பாரிய Construction    Project கள் இப்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த  Project  களுக்கு தற்பொழுது கூடுதலாக  Consultancy Firm களே தொழில்வாய்ப்புகளை வழங்கிவருகின்றார்கள். இவர்கள் Construction Professional  களுக்கு சிறந்த   Salary  யும் வழங்கி வருகிறார்கள் அடுத்தடுத்த வருடங்களில் அதிகளவான  Contracting, Sub-Contracting Firm களும் நிறைய தொழில்வாய்ப்புகளை வழங்கும் என்பதில் ஐயமில்லை. 

எனவே புதிதாக  Construction Field  இல் கல்வி கற்பவர்கள், QS சார்ந்த தொழில்வாய்ப்புகளை தேடுபவர்கள் Saudi Arabia வின் பக்கம் சற்று கவனத்தை செலுத்துவது சிறந்தது. 

The Challenging Part in Saudi Arabia ஆனது Qatar, Dubai  போன்றல்லாது, பாரிய நிலப்பரப்பைக்கொண்ட நாடாகும். மேலும்  Visa பெறுவதற்கான செலவுத்தனம் அதிகமாக காணப்படும்.


நன்றி - Eng.Hameed Ali


கட்டிட நிர்மாணத்துறையின் மத்திய கிழக்கு நாடுகளுக்குள்ளான நகர்வுகள் கட்டிட நிர்மாணத்துறையின்  மத்திய கிழக்கு நாடுகளுக்குள்ளான நகர்வுகள் Reviewed by Editor on May 05, 2022 Rating: 5