கொவிட் ஜனாஸா மையவாடியில் பிராத்தனையில் ஈடுபட விஷேட அனுமதி, மாகாண அமைச்சர் சுபையிருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு
(எம்.ரீ.எம்.பாரிஸ் - ஊடகவியலாளர்)
மட்டக்களப்பு, ஓட்டமாவடி, மஜ்மா நகர் கொவிட்- 19 ஜனாஸா நல்லடக்க மயானத்தை எவ்வித இடையூறுமின்றி தமது உறவினர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கபூரின் அருகில் சென்று தரிசிப்பதற்கும், பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்கும் இரண்டு பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி கொவிட் -19 ஜனாஸா நல்லடக்ககுழுவின் சிவில் சமூக பிராதான செயற்பாட்டாளர் அல்-ஹாஜ் எம்.எம்.எம்.ஹலால்தீன் தெரிவித்தார்.
குறிந்த மையவாடியினைப் பார்வையிடுவதில் சில கட்டுப்பாடுகள் பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இன்றைய தினம் கொவிட் -19 தொற்றினால் மரணித்த தனது தந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மஜ்மா நகர் மையவாடியினைத் தரிசிப்பதற்கு முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் அங்கு வருகை தந்த போது பெருமளவான சகோதரர்கள் தமது உறவினர்களின் கபூர்களைத் தரிசிப்பதற்கும், பிராத்தனைகளில் ஈடுபடுவதற்கும் செல்வதற்காக பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியை வேண்டி அங்கு கூடி நிற்பதனை அவதானித்தார்.
மேலும், நோன்புப்பெருநாள் தினம் என்ற அடிப்படையிலும் அவர்களின் சிரமங்களை கருத்திற் கொண்டு முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் மற்றும் ஓட்டமாவடி கொவிட் -19 ஜனாஸா நல்லடக்க குழுவின் சிவில் சமூக செயற்பாட்டாளர் அல்-ஹாஜ் எம்.எம்.எம்.ஹலால்தீன் ஆகியோர் எடுத்துக்கொண்ட கூட்டு முயற்சியின் பயனாக இந்த அனுமதி சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் தரப்பினரால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனுமதியானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 08.05.2022 திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் உறுதி செய்தனர்.
