மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரனவை அவரது காரில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தடுத்து வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சு வளாகத்திற்கு வருகை தந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் குழுவினால் அவர் தடுத்து வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்ததாகவும், உண்மையைக் கண்டறியவே தாங்கள் வந்ததாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் அமைச்சரவை இரகசியங்களை வெளியிட முடியாது என அமைச்சின் செயலாளர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்திருந்தார்.
எனவே, அவர் அமைச்சில் இருந்து வெளியேறும் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வாகனத்தை சுற்றி வளைத்து, அவரை வெளியேற அனுமதிக்கவில்லை.
அமைச்சின் செயலாளரை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
 
        Reviewed by Sifnas Hamy
        on 
        
June 27, 2022
 
        Rating: 
 
        Reviewed by Sifnas Hamy
        on 
        
June 27, 2022
 
        Rating: 
 