(தெளபீக் கனி)
இஸ்லாமிய நிந்தனை எழுத்தாளர் சல்மான்ருஷ்தி,அமெரிக்காவில் வைத்து நையப்புடைக்கப்பட்டார். இதில், கழுத்தில் காயமேற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (12) நிகழ்வொன்றில் பங்கேற்று விரிவுரை வழங்கிக்கொண்டிருந்த வேளையிலே இடம்பெற்றுள்ளது.
தாக்குதல்தாரியை பொலிஸார் கைது செய்து, விசாரணை நடாத்தப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்தியப்பூர்வீகம் கொண்ட ருஷ்தி, பிரித்தானியாவில் வாழ்ந்து தற்போது அமெரிக்காவில் குடியேறியுள்ளார். முஸ்லிம் உலகம் கொதிப்படையும் வகையில் இவரது எழுத்துக்கள் அமைந்திருந்தன.
இறைதூதர் முஹம்மது நபியவர்களையும் இஸ்லாத்தையும் நிந்தித்து நூல்கள் எழுதியதால்,1988 இல், ருஷ்தியின் தலைக்கு மூன்று மில்லியன் அமெரிக்க டொலரை வேட்டைப்பரிசாக ஈரான் அறிவித்தது. எனினும் இதைப்பற்றி அவர் பொருட்படுத்தாது வாழ்ந்தார்.பின்னர் 2012 இல் இந்த வேட்டைப்பரிசு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 13, 2022
Rating:

