களுத்துறை மாவட்ட கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கு கீழ் நடந்த உதைபந்தாட்ட போட்டிகளில் தொட்டவத்தை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலை அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட சாம்பியன் பட்டத்தை சூடிக் கொண்டதுடன், மாகாண மட்ட போட்டிகளுக்கும் தெரிவாகியுள்ளது.
இதேவேளை பாடசாலையின் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட அணி கால் இறுதி போட்டி வரை முன்னேரி இருந்தது, இருப்பினும் கடும் போட்டிகளுக்கு மத்தியில் அரை இறுதி வாய்ப்பினை தவறவிட்டது.
இச்சந்தர்ப்பத்தில், பாடசாலையின் சகல வயதுகளுக்கு கீழ்ப்பட்ட அணிகளுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், இதற்காக பங்களித்த அதிபர், ஆசிரியர்கள், அணியின் பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDC),பழைய மாணவர்கள் சங்கம் (OBA), பழைய மாணவிகள் சங்கம் (OGA), பெற்றோர்கள், நலன்விரும்பிகள் சகலருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
        Reviewed by Editor
        on 
        
August 16, 2022
 
        Rating: 
 

