அக்கரைப்பற்றில் இடம்பெற்ற பன்மைத்துவம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிநெறி

(கட்டுரையாளர் -றிஸ்வான் சாலிஹு)

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் அட்டாளைச்சேனை சர்வ சமயக் குழு மற்றும் றுஹூணு லங்கா அமைப்பின் ஒருங்கிணைப்பில் பன்மைத்துவம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிநெறி அக்கரைப்பற்று மென்கோ கார்டன் தனியார் ஹோட்டலில் றுஹூணு லங்கா அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.எஸ்.ஜஃபர் தலைமையில் கடந்த புதன்கிழமை (10) நடைபெற்றது.

சமய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கலாசார ரீதியாக நிலையானதாக மாற்றுவதற்கான மும்மதத்தினருக்குமான செயலமர்வாகவே இது நடாத்தப்பட்டது.

நிரந்தர சமாதானம், இன ஐக்கியம், சகவாழ்வு போன்றவற்றை கட்டியெழுப்புவதற்காக தேசிய சமாதான பேரவை பிராந்திய மட்டங்களில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் பயிற்சிகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கில், சமயக் குழுவின் நோக்கம், அதன் இலக்கு, நிதியளிப்பு வழிமுறைகள், சமூக அங்கீகாரம், உள்ளக ஒற்றுமை குழு செயற்பாடு மற்றும் பங்கேற்பாளர்களிடையே குழு செயல்பாடுகள் பற்றிய விரிவான விளக்கம் ஆகியவை கலந்து கொண்ட வளவாளர்களினால் செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கு தெளிவாகவும் பயிற்சிகளுடனும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் எம்.யூ. உவைஸ் மதனி, ஆசிய அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் இம்ரான் நசீர் ஆகியோர் இச்செயலமர்வில் வளவாளராக கலந்து கொண்டதோடு, அமைப்பின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் யுவதிகள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வமதத்தலைவர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டார்கள்.







அக்கரைப்பற்றில் இடம்பெற்ற பன்மைத்துவம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிநெறி அக்கரைப்பற்றில் இடம்பெற்ற பன்மைத்துவம் தொடர்பான ஒரு நாள் பயிற்சிநெறி Reviewed by Editor on August 19, 2022 Rating: 5