(கட்டுரையாளர் - றிஸ்வான் சாலிஹு)
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார, அரசியல் மாற்றம் மற்றும் அதனைத்தொடர்ந்து வந்த அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மற்றும் அதன் இறக்குமதியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல கஷ்டமான நிலைமை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த அசாதாரண கால கட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களில் தேவையுடைய குடும்பங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவது நம் அனைவர் மீதும் உள்ள பொறுப்பும் கடமையும் என்ற அடிப்படையில் அக்கரைப்பற்றில் உருவாக்கப்பட்டு செயற்திறனாக தம் பணியை செய்து கொண்டிருக்கும் தொண்டர் பணியினர் தான் " அக்கரைப்பற்று அவசரகால நிவாரணப்பணியினர்".
எவ்வித சொந்த இலாப நோக்கமற்றதும், கஸ்டங்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்நோக்கில் உருவாக்கப்பட்ட இவ்நிவாரணப்பணியில், அக்கரைப்பற்றில் உள்ள ஸகாத் நிதியம், ஜம்இய்யத்துல் உலமா சபை, அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், மாநகர சபை, பிரதேச சபை, சமூக சேவை அமைப்புகள், இளைஞர் கழகங்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோர்களின் ஒத்துழைப்போடும் ஒன்றினைவோடும் இந்த அவசரகால நிவாரணப் பணி ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரையும் நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை முன்னெடுத்து செயற்பட்டு வருகின்றார்கள்.
இத்திட்டத்தின் பிரகாரம் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள சுமார் 2000 தொடக்கம் 5000 குடும்பங்களுக்கு உதவியளிப்பதே இப்பணியினரின் இலக்காகும். இச்செயற்திட்டத்திற்கு இப்பகுதி மக்களின் பெறுமதியான பங்களிப்புகளின் ஊடாகவே இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இப்பணிக்கான நிவாரணங்களை சேகரிக்கும் பணி முதல் கட்டமாக ஜூலை மாதம் 30ஆம் திகதி முதல் இன்று வரைக்கும் அக்கரைப்பற்றின் சகல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் எம் அனைவரினதும் மனங்களை நெகிழ வைத்த விடயங்களில் ஒன்று தான், பாடசாலை மாணவர்கள் தங்களின் கல்வித்தேவைக்காக உண்டியல்களில் சேமிப்பு செய்த பணத்தைக் கூட இப்பாரிய நிவாரணப் பணிக்கு கொடுத்துதவியதை குறிப்பிடலாம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை அக்கரைப்பற்றில் பின்தங்கிய இடங்களில் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் மக்களின் பொருளாதாரத்தை பின்தள்ளியது. இம்மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பித்து வைத்து இப்பணி தற்போது பாரிய முன்னேற்றமடைந்துள்ளதை இப்பணியினர் தெரிவிக்கின்றனர்.
பல சிரமங்களுக்கு மத்தியில் இறைவனின் திருப்பொருத்தத்தை மட்டும் எதிர்பார்த்தவர்களாகவும், கஸ்டப்படுகின்ற மற்ற சகோதரர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பணியில் ஈடுபட்டுள்ள இப்பணியாளர்களுக்கு இப்பிரதேச மக்கள் தங்களது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதோடு, தங்களது நிவாரண உதவிகளை தாராள மனங்கொண்டு இவர்களிடம் கொடுத்துதவுவதே இப்பணிக்கு பொதுமக்கள் செய்யும் உதவியாகவும்.
உணவு நெருக்கடிக்கு அவசரகால நிவாரணப்பணியை முன்னெடுத்துள்ள பல்துறை சார்ந்த குழுவினர்...
Reviewed by Editor
on
August 18, 2022
Rating:
Reviewed by Editor
on
August 18, 2022
Rating:
