ஐந்து நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு

ஆசியா பவுண்டேசனினால் சிறுவர்களுக்கான இலவச டிஜிட்டல் வாசிப்புத் தளம் உருவாக்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள 05 நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இவ்நூல்கள் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் விசேட வேண்டுகோளுக்கிணங்க சிறுவர் பகுதிக்கான  252 நூல்கள் ஆசியா பவுண்டேசன் உயர் அதிகாரிகளினால் அமீர் அலி பொது நூலகத்தில் வைத்து நூலகர் ஐ.எல்.எம்.ஹனிபாவிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (23) கையளிக்கப்பட்டது.

சிறுவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கவும், சிறுவர்களை தீய வழிகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் நூலகங்களில் சிறுவர்களுக்கான பகுதியை மேம்படுத்தும் இத்திட்டத்தினை முன்னெடுக்கப்படுவதற்கு 2011ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை ஆசியா பவுண்டேசனின் புத்தக பகுதி அத்தியட்சகரும், ஆலோசகருமான அன்டன் நல்லதம்பி ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



ஐந்து நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு ஐந்து நூலகங்களுக்கு நூல்கள் அன்பளிப்பு Reviewed by Editor on August 24, 2022 Rating: 5