(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்றில் இயங்கி வரும் ரிதம் முகநூல் தொலைக்காட்சியின் கலையகம், புதிய பரிமாணத்துடனும், அதிசிறப்பு டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான சகல வசதிகளுடன் கூடிய புதிய இடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை ரிதம் முகநூல் தொலைக்காட்சியின் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.மஜீட் அவர்களின் தலைமையில் மிகவும் கோலாகலமாக அக்கரைப்பற்றில் திறந்து வைக்கப்பட்டது.
ரிதம் பணிப்பாளர் மஜீட் அவர்களின் தாயார் அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில், சிறப்பு அதிதியாக சிரேஷ்ட சட்டத்தரணி டாக்டர் கே.எல்.எம்.சமீம், ஏனைய முகநூல் தொலைக்காட்சிகளின் பணிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், ரிதம் தொலைக்காட்சியின் நேயர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
August 28, 2022
Rating:


