கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் கடமையை பொறுப்பேற்ற அஸ்மி

மந்தகதியில் இயங்கி வந்த கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களத்தை மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக இயங்க வைத்து, மாகாண கூட்டுறவுத் திணைக்களம் ஒன்றுள்ளது என்பதை முழு மாகாணத்திற்குமே பிரகாசிக்கச் செய்த இலங்கை நிர்வாக சேவை தரம் ஒன்றை சேர்ந்த ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டு இன்று (12) வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 

அக்கரைப்பற்று மாநகர சபையில் மிக நீண்ட காலமாக ஆணையாளராக பணியாற்றி தனது பணியை சிறப்பாகசச் செய்தவர் ஆவார்.

இவர் எங்கு சென்றாலும் தனது பணியினை நேர்த்தியான முறையில் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் ஒருவராக இருந்து வருகிறார். அதேபோல், கல்முனை மாநகரம் மிக குறுகிய காலத்துக்குள் மிகச் சிறப்பாக இயங்க வைப்பார் என்று கல்முனை மாநகர மக்கள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் கடமையை பொறுப்பேற்ற அஸ்மி கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் கடமையை பொறுப்பேற்ற அஸ்மி Reviewed by Editor on August 12, 2022 Rating: 5