அக்கரைப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் அஸ்ஹர் சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று, பட்டியடிப்பிட்டியைச் சேர்ந்த அப்துல் மனாப் அஸ்ஹர் முழுத்தீவுக்குமான சமாதான நீதவானாக கடந்த வெள்ளிக்கிழமை (02) அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கெளரவ லுசாகா குமாரி தர்மகீர்த்தி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளரான இவர், இப்பிரதேசத்தில் உள்ள பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகிப்பதோடு, அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலத்தில் தன்னுடைய பிரதேச மக்களுக்கு சமூக சேவை அமைப்புகளின் ஊடாக பெரும் உதவிகளையும் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



அக்கரைப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் அஸ்ஹர் சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் அக்கரைப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் அஸ்ஹர் சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் Reviewed by Editor on September 06, 2022 Rating: 5