சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் எனும் தொணிப்பொருளில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிற்பதற்கான இளைஞர் முன்னணி ( AYEVAC) நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களில் ChildFund நிறுவனத்தோடு இனைந்து ஏற்பாடு செய்துள்ள சிறுவர் தின நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட நிகழ்வுகள் தேசிய இனைப்பாளர் N.J.செரோன் அனாஸ் அவர்களின் வழிகாட்டலில் (02) திகதி சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் Spartans Sports Club மற்றும் Spartans Sports Academy சிறுவர்களுக்கு உதைபந்தாட்ட போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் அதிதிகளாக வைத்தியர் MNM.தில்ஷான், GAfso அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் A.J.காமில் , Spartans Sports Club தலைவர் MNMH. அர்கம் உள்ளிட்ட அணியினர் கிராம சேவகர்களான ABM றமீஸ் , M உதய ராஜன், ஓய்வு பெற்ற தபால் அலுவலகர் ALM பஷீர், AYEVAC மாவட்ட பிரதிநிதிகளான AM. ஹிஷாம், CMM. சப்னாஸ்,M.ஜப்ரான், M.சர்பான் MTAH அன்பாஸ் என மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் சிறுவர்களின் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பில் Gafso அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் A.J காமில் உரையாற்றியதை தொடர்ந்து வைத்தியர் MNM தில்ஷான் விளையாட்டின் மூலம் ஆரோக்கியமான சிறுவர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார். நிகழ்வின் நன்றியுரையை Spartans Sports Club இன் தலைவரும் நிறுவுனருமான MNMH அர்கம் அவர்கள் சிறுவர் தின வாழ்த்து செய்தியுடன் அதிதிகளால் சிறுவர்களுக்கு வெற்றிக் கேடயம் மற்றும் கிண்ணங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
Reviewed by Editor
on
October 03, 2022
Rating:



