அக்கரைப்பற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்ட றிஷாட் எம்.பி

தமிழ் லெட்டர் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த சமூகப் பணியும் பொறுப்புக் கூறலுக்குமான விருது விழா நிகழ்வு இன்று (08) சனிக்கிழமை அக்கரைப்பற்று கடற்கரை தனியார் வரவேற்பு மண்டபமொன்றில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரெத்தினம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹ்றூப், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.சபீஸ், அட்டாளைச்சேனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஜுனைதீன்,  சட்டத்தரணி அன்ஸில், தொழிலதிபர் அப்துல் பாஸீத் உட்பட இன்னும் பல அதிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பன்முக ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் பல கட்சிகளை சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.






அக்கரைப்பற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்ட றிஷாட் எம்.பி அக்கரைப்பற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்ட றிஷாட் எம்.பி Reviewed by Editor on October 08, 2022 Rating: 5