அல் குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

(எம்.பஹ்த் ஜுனைட்)

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற காத்தான்குடி மற்றும் அண்மித்த கிராமங்களிலுள்ள பகுதிநேர அல் குர் ஆன் மனனபீட மாணவர்களுக்கான அல் குர் ஆன் மனனப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (07) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மருதமுனை தாறுல் ஹுதா பெண்கள் அறபுக்கல்லூரியின் அதிபர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் (மதனி ) பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் முன்னாள் தலைவர் எம்.ஐ. ஆதம்லெப்பை (பலாஹி) விஷேட அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களுக்கான பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவித்தனர்.

இந்நிகழ்வில்  உலமாக்கள், பிரமுகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









அல் குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா அல் குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா Reviewed by Editor on October 08, 2022 Rating: 5