நீர்வழங்கல் சபை ஊழியர்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்லாறு அணி சம்பியன்

(றிஸ்வான் சாலிஹு)

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலயத்திற்குட்பட்ட ஊழியர்களுக்கிடையில் விளையாட்டு திறன் மற்றும் நட்புறவை கட்டியெழுப்பும் வகையில் சனிக்கிழமை (08) களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் முகாமையாளர் காரியாலயம் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்லாறு அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

அணிக்கு ஆறு பேர் ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியில் 12 அணிகள் பங்குகொண்டு இறுதிப்போட்டியில் கல்லாறு அணியும் வாணிப பிரிவு அணியும் மோதிக்கொண்டு, இதில் கல்லாறு அணி மிகவும் சிறப்பாக விளையாடி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

நீர்வழங்கல் சபையின் கிழக்கு மாகாண உதவிப்பொது முகாமையாளர் (செயற்பாடு) டீ.ஏ.பிரகாஷ் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் எம்.குமாரதாஸ் கெளரவ அதிதியாகவும், பொறியியலாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் இப்போட்டி நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.











நீர்வழங்கல் சபை ஊழியர்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்லாறு அணி சம்பியன் நீர்வழங்கல் சபை ஊழியர்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்லாறு அணி சம்பியன் Reviewed by Editor on October 10, 2022 Rating: 5