விசிநவ பகுதியில் சிறுவர்களுக்கான முதலாவது ஆங்கிலப் பயிற்சிப் பட்டறை

பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனமான PIRAINILA INSTITUTE சிறுவர்களுக்கான ஆங்கில செயன்முறைப் பயிற்சி நெறியொன்றை நேற்று சனிக்கிழமை (08) கெகுணகொல்ல, பிறைநிலா கல்வி நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

பிறைநிலா கல்வி நிலையத்தின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் பயிற்றுவிப்பாளர்களாக ஹாபிலா மொஹிடீன் (BBA), ஜனாபா மௌலானா (B. Com) ஆகியோர்கள் கலந்து சிறுவர்களுக்கான பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.

காலை 09.00 மணியிலிருந்து மாணவர்களுக்கான செயன்முறைப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு பகல் ஒரு மணிக்கு முதலாவது அமர்வு நிறைவுபெற்று மாலை 02.00 மணிக்கு இரண்டாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாவது அமர்வில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும், அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக Wedding Ring நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி ரயீஸ்மீரா வும் சிறப்பதிதிகளாக அஸ்மா ட்ரவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அஷ்ஷேக் ரிஹான் நளீமி அவர்களும், FN GROUP OF COMPANIES நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் பஸ்மின் இல்யாஸ் மற்றும் அவரது துணைவியார், குளியாபிடிய பிரதேச சபையின் உப தவிசாளர் M.C இர்பான், கெகுணகொல்ல பிரதேச கிராம உத்தியோகத்தர் H.P.N. ஹேரத், பிறைநிலா ஊடக வலையமைப்பின் செயலாளர் M.F.M. ரிப்கான் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

2022 ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர்களது திறமை, முன்னேற்றம், கற்பித்தல் முறை, மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கம் தொடர்பில் பாராட்டுக்களை அதிதிகள் தெரிவித்ததோடு கனணிக்கல்வி தொடர்பிலும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








விசிநவ பகுதியில் சிறுவர்களுக்கான முதலாவது ஆங்கிலப் பயிற்சிப் பட்டறை விசிநவ பகுதியில் சிறுவர்களுக்கான முதலாவது ஆங்கிலப் பயிற்சிப் பட்டறை Reviewed by Editor on October 09, 2022 Rating: 5