(றிஸ்வான் சாலிஹு)
கனடாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் "செய்துன் நெகர் பெளன்டேஷன்" அமைப்பின் அனுசரனையுடன் கடந்த சனிக்கிழமை (22) அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் விருது வழங்கும் நிகழ்வில் பிறை எப்.எம் அறிவிப்பாளர் றம்ஸானா சமீல் சிறந்த பெண் அறிவிப்பாளருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
அமைப்பின் அக்கரைப்பற்று ஒருங்கிணைப்பாளர் அனீஸ் (ஜே.பி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைப்பின் தலைவி செய்துன் நெகர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபன பிறை எப்.எம் இல் ஒளிபரப்பு செய்யப்படும் சகல நிகழ்வுகளையும் தொகுத்து வழங்குவதோடு, விசேடமாக மகளிர் மட்டும் நிகழ்வை இவர் தொகுத்து வழங்கி நேயர்களின் அபிமானம் பெற்றவராவார்.
இவர், பிறைக்குயில், கலை முத்து மற்றும் கலை மாமணி போன்ற விருதுகளுக்கு சொந்தக்காரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
