அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று (25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு சந்தர்ப்பத்தை வழங்கிய நிலையில்,

 முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் ,பெத்தும் நிஸ்ஸங்க 40 ஓட்டங்களையும்,சரித் அசலங்க ஆட்டமிழக்காது 38 ஒட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.

அதன்படி 158 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 17 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மார்கஸ் ஸ்டொனிஸ் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.    அவர்19 பந்துகளில் 6 சிக்ஸர் அடங்களாக இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி Reviewed by Editor on October 25, 2022 Rating: 5