(றிஸ்வான் சாலிஹு)
அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலனுதவிகளையும் சமுர்த்தி வங்கிகளுடாக வழங்கி வைக்கும் திட்டத்தின் கீழ், அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் முதியோருக்கான கொடுப்பனவு வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு செவ்வாய்க்கிழமை (25) அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் யூ.கே.எம்.நழீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இக்கொடுப்பனவை வழங்கி வைத்து இதனை ஆரம்பித்து வைத்தார்.
தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.பீ.எம்.ஹுசைன், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்க முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஜே.எம். நிஃமதுல்லாஹ், கருத்திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
