அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், கல்முனை மாநகர சபைக்கு புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர் ரஹுமான், கல்முனை மாநகர சபை மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் நேற்று (25) செவ்வாய்க்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கல்முனை மாநகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பரிந்துரையின் பேரில், கடந்த காலங்களில் ‘கிறீன் பீல்ட்’ கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவின் தலைவராக செயற்பட்ட அரசியல், சமூக செயற்பாட்டாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஏ.கலீலுர் ரஹுமான் நியமிக்கப்பட்டார்.
இவரது நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் வெளியிடப்பட்டது.
