இன்று (26) புதன்கிழமை இடம்பெற்ற இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியில் அயர்லாந்து அணி இங்கிலாந்து அணியை வெற்றி கொண்டுள்ளது.
இப்போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 05 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு, இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிய போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன்போது, இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 105 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து அணி
 
        Reviewed by Editor
        on 
        
October 26, 2022
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
October 26, 2022
 
        Rating: 
 