(றிஸ்வான் சாலிஹு)
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபகர் தின நினைவு விழாவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த, பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் (பொறியியல் துறை) அவர்கள் சிறந்த ஆய்வாளருக்கான இவ்வாண்டுக்கான (2022) உபவேந்தர் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களினால் இந்த விருது அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பொறியியல் துறைசார்ந்து பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் அவர்களினால் எழுதப்படுகின்ற ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வு மாணவர்களினாலும், அறிஞர்களினாலும் சிலாகித்துப் போற்றப்படுகின்றன. உசாத்துணைகளாகவும் மேற்கோள்களாகவும் பயன்படுத்தப்படுத்தப்படும் இவரது ஆய்வுகள் இத்துறையின் புத்தாக்க செயற்பாடுகளுக்கும் பெரும் பங்களிப்பை நல்கி வருகின்றன.
இவ்வகையில் தமது துறையிலிலுள்ள சிறந்த பத்து ஆய்வாளர்களுள் ஒருவராக இவர் அடையாளம் காணப்பட்டிருப்பது கல்வி சமூகத்திற்கும் இப்பிராந்தியத்திற்கும் மகிழ்ச்சி தருகின்ற விடயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
