(றிஸ்வான் சாலிஹு)
சமுர்த்தி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சிறுவர் பராய போசனை மட்டத்தினை வலுவூட்டும் வேலைத்திட்டம்-2022ன் கீழ் சிறுவர்களை மந்தபோசனையிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக்கஞ்சி முதலான போஷக்குணவுகள் வழங்கி வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (17) திங்கட்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரீ.எம்.எம்.அன்சார் (நழீமி) அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்றில் உள்ள மூன்று முன்பள்ளி நிலையங்களில் நடைபெற்றது.
சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் எம்.பீ.எம்.ஹுசைன், முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஜே.எம். நிஃமதுல்லாஹ், மாவட்ட சமுர்த்தி உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர் இஷட். றஹ்மான், கருத்திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. சபாயுடீனின்,கருத்திட்ட உதவியாளர் எம்.ஐ. முஹாஜிர், பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள், சமுர்த்தி சங்க தலைவர்கள், மாணவர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு அக்கரைப்பற்று சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பிரதேச மட்ட தவிசாளர் ஏ.ஜீ.ஏ.நசீர், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் நிதிப்பங்களிப்புடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
