(ஏ.சி.றியாஸ், றியாத் ஏ.மஜிட்)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உபவேந்தர் பூப்பந்து வெற்றிக்கிண்ண சுற்று போட்டியின் இறுதிப் போட்டியானது செவ்வாய்க்கிழமை (18) பல்கலைக்கழக உள்ளக பூப்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பூப்பந்து இறுதிப் போட்டிகளின் வீரர்களை அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, இறுதிப் போட்டியை உபவேந்தரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் கொரோனா தொற்றுப்பரவல் போன்ற காரணங்களால் இறுதிப் போட்டியை நடத்த முடியாமையினால் தள்ளிப்போன நிலையில் நேற்று குறித்த போட்டி இடம்பெற்றிருந்தமே குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகத்தர் பூப்பந்து அணிக்கும், ஊவா வெல்லெச பல்கலைக்கழக உத்தியோகத்தர் பூப்பந்து அணிகளுக்குமிடையில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியின் மொத்தமாக (13) சுற்றில் ஊவா வெல்லெச பல்கலைக்கழக உத்தியோகத்தர் பூப்பந்து அணி (8) புள்ளிகளையும், தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகத்தர் அணி( 5) புள்ளிகளை பெற்று இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தோழ்வியைத் தழுவிக்கொண்டது.
இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற ஊவா வெல்லெச பல்கலைக்கழக உத்தியோகத்தர் பூப்பந்து அணி தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து சாம்பியனாக மகுடம் சூட்டினர்.
இறுதிப் போட்டி நிகழ்வில் அதிதிகளாக பல்கலைகழக பதிவாளர், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விளையாட்டு நிருவாக உத்தியோகத்தர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.
 
        Reviewed by Editor
        on 
        
October 19, 2022
 
        Rating: 
 

