உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது

2022 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டு பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதியும், 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.





உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது Reviewed by Editor on October 07, 2022 Rating: 5