வரக்காபொல, அகுருவெல்ல, தும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன தாய் மற்றும் மகனின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் பெய்த கனமழையுடன் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
47 வயதுடைய தாய் மற்றும் 24 வயதுடைய மகனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை 4.30 மணியளவில் இடிபாடுகளில் சிக்கியிருந்த தந்தை மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து ஏற்பட்ட வீட்டில் மற்றுமொரு சிறுவன் இருந்ததுடன் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த சிறுவன் புலமைப்பரிசில் வகுப்பில் கலந்து கொள்ள சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவன் தற்போது அருகில் உள்ள வீட்டில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
        Reviewed by Editor
        on 
        
October 15, 2022
 
        Rating: 
 

