வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும் விதைகள், மரக்கன்றுகள், உபகரணங்கள் வழங்கிவைப்பு

(எஸ்.எம்.அறூஸ்)

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்குடன் கிறிஸ்சலிஸ் நிறுவனத்தினால்  அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள  174 பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிப்பதற்கான விதைகள், மரக்கன்றுகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச சபையில் இடம்பெற்றது.

கிறிஸ்சலிஸ் நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் யு.எல்.சம்சுடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர்  சட்டத்தரணி எப்.நஹீஜா முஸாபிர், பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.பாயிஸ் உட்பட கிறிஸ்சலிஸ் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமங்களை உள்ளடக்கிய  ஐந்து சனசமூக நிலையங்களில் அங்கத்துவம் வகிக்கும் சுமார் 174 பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் விதைகள்,மரக்கன்றுகள் மற்றும் உபகரணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்கான ஆலோசனை வழிகாட்டல்களை கிறிஸ்சலி்ஸ் நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.








வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும் விதைகள், மரக்கன்றுகள், உபகரணங்கள் வழங்கிவைப்பு வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கும்  விதைகள், மரக்கன்றுகள், உபகரணங்கள் வழங்கிவைப்பு Reviewed by Editor on October 16, 2022 Rating: 5