(ஆதம்)
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை விழிப்பூட்டும் செயலமர்வு இன்று வியாழக்கிழமை (13) அம்பாறை லேக்ஜே ஹோட்டலில் அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எம்.ஏ. டக்ளஸ், அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் சுகத் திஸாநாயக்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், வளிமண்டலவியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் துலாரி பெர்னாண்டோ, அனர்த்த முகாமைத்துவ நிலைய ஊடகப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஜானக ஹெதுன் பதிரஜ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது அம்பாறை மாவட்டத்தின் மூவின ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதது.
