(றிஸ்வான் சாலிஹு)
2021ஆம் ஆண்டு நடைபெற்ற தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் இருந்து தோற்றி சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.உவைஸ் தலைமையில் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.
இதில் 171 சிறந்த புள்ளிகளைப் பெற்ற அப்துல் சறுஜான் அதிலா என்ற மாணவி இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட் ஸகி அவர்களினால் கிண்ணம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற இக்கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.ஜீ. அன்வர் உட்பட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், பாராட்டி கெளரவிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
