இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் மிக நீண்ட காலமாக இருந்துவரும் காணி அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் அவை தொடர்பான பிரச்சினைகளுக்கு பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் வழிகாட்டலில் துரிதகதியில் உடனடி தீர்வுகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட பிரிவுகளில் நீண்டகாலமாகக் குடியிருந்துவரும் மக்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ், காணி அளிப்புப் பத்திரங்கள் (உறுதி) வழங்கப்பட்டு வருகின்றது.
புதிதாக அளிப்புப் பத்திரங்கள் (உறுதி) கிடைக்கப்பெற்றவர்களுக்கான அளிப்புப் பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை (19) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் அவர்கள் உட்பட காணி உத்தியோகத்தர் என்.எல்.எம். மாஹிர், காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
October 19, 2022
Rating:

