தனுஷ்க குணதிலக்க தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சிட்னி நீதவான் நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை வழங்கியுள்ளது.

அந்தத் தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக தனுஷ்க குணதிலக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

(அததெரன)







தனுஷ்க குணதிலக்க தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தனுஷ்க குணதிலக்க தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு Reviewed by Editor on November 09, 2022 Rating: 5