(சியாத்.எம்.இஸ்மாயில்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனர்த்த முன் ஆயத்த ஒத்திகை நிகழ்வு (Disaster Response Drill) வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்றது.,
வைத்திய அத்தியட்சகர் டொக்டர்.ஜி.போல் ரொஷான் மேற்பார்வையில் சுகாதார அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ எதிர் நடவடிக்கைப் பிரிவிலிருந்து (Disaster Management Response Division) டொக்டர். நோவில் விஜேசேகர மற்றும் அனர்த்த முகாமைத்துவ முகாமைத்துவ வைத்திய அதிகாரி டொக்டர். விராஜி விக்ரமசிங்க ஆகியோரினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில், அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயர் பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு, மயக்கயவில் பிரிவு, நீதித்துறை மருத்துவ பிரிவு ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகள், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக இடம்பெற்றது.
திடீர் அனர்த்தம் ஒன்று எதிர்பாராதவிதமாக நடைபெறுகின்ற சமயத்தில் பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்கும் நோக்கில் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் முன் ஆயத்த தயார்படுத்தல்கள், முதலுதவி மற்றும் சுகாதார சிகிச்சையளிப்பு எவ்வாறு நடைபெற வேண்டும் என்ற ஒத்திகை நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
இந்த ஒத்திகை நிகழ்வில், பங்குபற்றிய வைத்தியசாலை ஊழியர்களுக்கும் ஏற்பாடு செய்த வைத்தியர் விராஜி விக்ரமசிங்கவுக்கும் வைத்திய அத்தியட்சகர் டொக்டர்.ஜி.போல் ரொஷான் நன்றி தெரிவுத்துக் கொண்டதுடன் நிகழ்ச்சியின் நிறைவில் கலந்து கொண்டவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
Reviewed by Editor
on
November 05, 2022
Rating:




