அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி நூலகத்துக்கு நூற்தொகுதிகள் அன்பளிப்பு

(முகமட் நாளீர்)

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை தலைமையகமாக கொண்டு செயற்பட்டு வரும் " தென்கிழக்குப் பிராந்திய நூலக தகவல் வலையமைப்பின் " ( SERLIN ) ஒரு நிகழ்வான நூலகங்களுக்கு நூல்களை அன்பளிப்புச் செய்தல் திட்டத்தின் ஒரு தொடராக நேற்று (22) செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் நூலகத்துக்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட உதவி நூலகர் எம்.சீ.எம். அஸ்வர் தலைமையிலான ஒரு குழு தொழில் நுட்பக் கல்லூரிக்கு வருகை தந்து கல்லூரியின் நூலகத்தினை பார்வையிட்டதுடன், நூல்களையும் வழங்கி வைத்தனர்.

கல்லூரியின் நூலகர் எம்.றுமைஸ் அவர்களின் தலைமையில் நடந்தேறிய இந்நிகழ்வில் கல்லூரியின் பதில் அதிபர் எஸ்.எச்.எம்.சல்மான் அவர்களிடம் குறித்த நூல்களை நன்கொடையாக கையளித்திருந்தனர்.

இதில், கல்லூரியின் வர்த்தக பிரிவுத் தலைவர் எஸ்.சனீஜ் , QMS தலைவர் சட்டத்தரணி எப்.எச்.ஏ. அம்ஜாட், மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

தென்கிழக்கு பிராந்திய நூலக தகவல் வலையமைப்பின் ஓர் அங்கத்துவமாக அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியும் இணைந்து கொண்டமை முக்கியமானதாகும்.



அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி நூலகத்துக்கு நூற்தொகுதிகள் அன்பளிப்பு அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி நூலகத்துக்கு நூற்தொகுதிகள் அன்பளிப்பு Reviewed by Editor on November 23, 2022 Rating: 5