(சர்ஜுன் லாபீர்)
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் "சுயமாக முன்னேற முனையும் மனிதர்கள்" எனும் நோக்கினை அடிப்படையாக கொண்டு அம்பாறை மாவட்டம் முழுவதும் சிறுதொழில் முயற்சியாளர்களின் திகாமடுல்ல முயற்சியாண்மை வர்த்தக கண்காட்சி இன்று (23) கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கெளரவ அதிதிகளாக கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த புத்திக, கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி என்.ஆர்.ரம்சீன் பக்கீர், அம்பாறை மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர் ஐ.எம் நாசர், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாசீன் பாவா, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம் பாரூக், சிறுதொழில் முயற்சியாண்மை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எச்.எல்.ஏ ஜலீல், டி. லாவனியா, கே.நிரோஜினி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
November 23, 2022
Rating:





