(றிஸ்வான் சாலிஹு)
மருதமுனை கடற்கரையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் டாக்டர் சிராஸ் மீராசாஹிப் வெற்றிக்கிண்ண கடற்கரை உதைபந்து சுற்றுப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் இன்று (02) புதன்கிழமை மாலை கல்முனை மாநகர சபை உறுப்பினரும், சுற்றுப்போட்டி ஏற்பாட்டு குழுவின் தலைவருமான ஏ.ஆர். அமீர் தலைமையில் இடம்பெற்றது.
மருதமுனை எவரடி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மருதமுனை ஈஸ்டர்ன் யூத் விளையாட்டுக்கழகம் மோதிய இன்றைய முதலாவது காலிறுதி ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் மருதமுனை எவரடி விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.
இரண்டாவது காலிறுதியில் மோதிய மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகம் நிந்தவூர் சவுண்டர்ஸ் விளையாட்டுக்கழகத்தை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டிகளில் கிழக்கின் கேடயம் பிரதானியும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், டொப் மேன் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எம். றிக்காஸ், ரோஷன் லங்கா நிறுவன உரிமையாளர் முஹம்மட் ரொஷான், ஐ.டி.க்கியூ லெப் நிறுவன பணிப்பாளர் சபூர் ஆதம், கிழக்கின் கேடயம் பொதுச்செயலாளர் யூ.எல்.என் ஹுதா, டீ.எம். நியூஸ் பணிப்பாளரும், கலாச்சார உத்தியோகத்தருமான ஏ.எல்.எம். சினாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
November 02, 2022
Rating:






