(றிஸ்வான் சாலிஹு)
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நாட்டு மக்களுக்கான "பாதுகாப்பான, முழுமைப்படுத்தப்பட்ட உணவு" என்ற திட்டத்தின் அடிப்படையில் அக்கரைப்பற்று பிரதேச சபையில் நடப்பட்ட மரக்கறி வகைகளின் அறுவடை நிகழ்வு புதன்கிழமை (09) பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக் தலைமையில் நடைபெற்றது.
இச்சபையின் முன்வளாகத்தில் கத்தரி, கொச்சி, கத்தரி மற்றும் இன்னும் பல மரக்கறி வகைகளை முன்னோட்டமாக நாம் பயிரிட்டு அப்பயிர்களில் இருந்த அறுவடை பெரும் சந்தோஷத்தையும் பரிபூரணமான திருப்தியையும் தந்துள்ளதோடு, இச்சபையின் ஊடாக உலக வங்கியின் உதவியுடன் எல்.டீ.எஸ்.பீ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வட்டாரங்களிலும் தெரிவு செய்யப்படும் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை ஊக்குவிக்க காய்கறி நடும் திட்டத்தினையும் ஒரு அங்கமாக செயல்படுத்த ஏகமானதாக சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
November 11, 2022
Rating:
