பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரி விளையாட்டுத்துறையிலும் சாதனை

(ஏ.எச்.எம்.ஷிஹார் - BSc)

மொனராகலை மாவட்ட பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணியினர் 2022ஆம் ஆண்டுக்கான வலய மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்று மாகாண  மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, பாடசாலையின் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் பொருட்டு எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் கடின பந்து, உதைப்பந்தாட்ட பொருட்கள் மற்றும் உதைப்பந்தாட்ட அணிகலன்கள்  ஆகியவைகளை கல்லூரியின் அதிபர் யூ.எல்.எம்.றபீக், பிரதி அதிபர் என்.எம்.எம்.ஹாரூன்  மூலமாக  விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான எம்.யூ.எம்.சிப்றாத் மற்றும் கசுன் பண்டார ஆகியோர்களிடம் நேற்று (25) வெள்ளிக்கிழமை கல்லுரி வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.








பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரி விளையாட்டுத்துறையிலும் சாதனை பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரி விளையாட்டுத்துறையிலும் சாதனை Reviewed by Editor on November 26, 2022 Rating: 5