தனுஷ்க குணதிலக்கவை பிணையில் எடுக்க பணம் திரட்டும் கிரிக்கெட் சபை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு இரண்டாவது பிணைத் தொகையான 200,000 அவுஸ்திரேலிய  டொலர்களை திரட்டுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) போராடி வருவதாகவும், அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் பிணை கோரி மேல்முறையீடு செய்வதற்காக மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் சில நபர்களிடமிருந்து நன்கொடைகளை ஏற்கனவே கோரியுள்ளதோடு கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க  ஏற்கனவே பாரிய தொகையை கையளித்துள்ளார்.

அடுத்த வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 12ஆம்திகதி  எடுத்துக் கொள்ளப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.




தனுஷ்க குணதிலக்கவை பிணையில் எடுக்க பணம் திரட்டும் கிரிக்கெட் சபை தனுஷ்க குணதிலக்கவை பிணையில் எடுக்க பணம் திரட்டும் கிரிக்கெட் சபை Reviewed by Editor on November 12, 2022 Rating: 5