நீண்ட இடைவெளியின் பின்னர் நட்பின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூத்த வேர்களில் ஒருவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கௌரவ எம்.ரி.ஹஸன் அலி சேர் அவர்களை சந்திக்க கிடைத்தது.
அவருடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பல விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
பின்வரும் கருத்துக்களை அவரது கருத்துரையில் அவதானிக்க முடிந்தது..
1.முஸ்லிம் தனித்துவ அரசியல் கட்சிகளின் போக்கு அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில் அதிக கவனம் செலுத்தப் படுவதனால் முஸ்லிம் சமூகம் எதிர் கொள்கின்ற எந்தவொரு பிரச்சினையையும் நியாயமான அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதில் தடையாக அமைகிறது.
2.தலைமைத்துவ நெறிப்படுத்தல் இல்லாத ஒரு நிலைக்கு இச்சமூகம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
3.அஷ்ரப் மூலமாக அரசியல் அந்தஸ்தை பெற்ற எவரும் அவரின் கொள்கையை முன்னெடுக்க முடியாமல் தேர்தல் கால கோசங்களுடன் மாத்திரம் முஸ்லிம் தனித்துவ குரல் ஓங்கி மௌனித்துப் போகிறது.
4.தமிழர் சமூகம் அரசியல் ரீதியாக பல கூறுகளாகப் பிரிந்து செயற்பட்ட போதிலும் தமிழர் பிரச்சினைக்குரிய தீர்வு எனும் விடயத்தில் ஒரே கொள்கையில் இருப்பதை அவதானிக்கலாம்.
5.13ஆவது திருத்தத்தை விட அதிக அதிகாரங்களை கொடுப்பது பற்றி பேசப்படும் இன்றைய நிலையில் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த கருத்துக்களை முன்வைப்பதில் தற்போதைய அரசியல் தலைவர்களிடம் ஒருமித்த தீர்வு காணப்படாமல் உள்ளது.
6.இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தில் வடகிழக்கு வாழ் முஸ்லிம்களின் அரசியல் போக்கும் சூழ்நிலையும் வித்தியாசமானது.
7.கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் அரசியல் தனித்வத்தை முன்னிலைப் படுத்தி இளைய தலைமுறையினர் அரசியல் ரீதியாக முன்னிலைப் டுத்தப்பட வேண்டிய தேவை வெகுவாக உணரப்படுகிறது.
8.தமிழர் அரசியலின் பின் புலத்தில் தமிழ் புத்திஜீவிகள் பங்காற்றி வருவது போன்ற ஓர் கட்டமைப்பின் கீழ் கிழக்கு வாழ் முஸ்லிம் புத்தி ஜீவிகள் ஒன்றிணைந்து பரந்த அடிப்படையில் சிந்தித்து எதிர் கால அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம் மக்கள் சார்பில் முன்வைப்பதற்கு ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் செய்தல் அவசியம்.இவ்விடயத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகம் முதன்மை வகித்து செயற்படும் போது ஆரோக்கியமாக அமையும்.....
உண்மையில் ஹஸன் அலி சேர் அவர்கள் மிகுந்த கவலையுடன் எமது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நிலவரங்களை பகிர்ந்து கொண்டார்.
முஸ்லிம் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை பிரதி பலிக்கூடிய அமைப்பில் விடயங்களை முன்வைக்க துணை நிற்றல் அவசியம்.
எம்.எல்.பைசால் (காஷிபி)
Reviewed by Sifnas Hamy
on
November 25, 2022
Rating:
