(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
நெல் வயல் வரம்புகளில் உணவுப்யிர்ச்செய்கையை உறுதி செயவதனூடாக தேசிய உணவுப்பாதுகாப்பினை உறுதி செய்யும் வேலைத்திட்டமொன்று இன்று (21) திங்கட்கிழமை சாய்ந்தமருதில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக்கின் வழிகாட்டலுக்கிணங்க உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஐ.முவாபிக்காவின் தலைமையில் சாய்ந்தமருது குடாக்கரை மேல் கண்டத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாகல்,வெண்டி, பயிற்றை, கீரை மற்றும் புஸிடா போன்ற பயிர் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் நாட்டியும் வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட்,குடாக்கரை மேல்கண்ட விவசாய.அமைப்பின் தலைவர் ஐ.எல்.ஏ.மஜீத், கிராம உத்தியோகத்தர்களான எம்.எம்.மாஹிர், எம்.என்.எம்.சஜா, வட்டவிதானை ஏ.எல்.அபூபக்கர்,கமநல சேவைகள் நிலைய உத்தியோகத்தர்களான ஐ.எல்.ஏ.அஸீஸ், எஸ்.ஹஸ்ஸாலி பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயத்திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
