கட்டாரில் நடைபெறும் 2022 பீபா கால்பந்தாட்டச்சுற்றுப்போட்டியில் இன்று (21) திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஈரானை எதிர்த்து இங்கிலாந்து விளையாடி 6:2 கோல்கள் விகிதத்தில் வென்றி பெற்றுள்ளது.
இப்போட்டி கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள கலீபா சர்வதேச அரங்கில் நடைபெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் அதன் வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் முதலாவது கோலையும், புகாயா சாகா இரண்டாவது கோலையும், ரஹீம் ஸ்டேர்லிங் மூன்றாவது கோலையும் இடைவெளி நேரத்திற்கு முன்னர் புகுத்தினார்கள். இடைவேளையின் பின்னர் புகாகோ சாகா தனது இரண்டாவது கோலாக அணியின் நான்காவது கோலையும், மார்கஸ் ரஷ்போர்ட் ஐந்தாவது கோலையும், ஜக் கிறேலிஸ் ஆறாவது கோலையும் புகுத்தினார்.
ஈரானிய வீரர் மெஹ்தி தொரேமி தனது அணிக்காக இரண்டு கோல்களை புகுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
