நாளை 10 மணித்தியாலயம் நீர்த்தடை

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (10)  பத்து மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவெல மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை நீர்விநியோக நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.



நாளை 10 மணித்தியாலயம் நீர்த்தடை நாளை 10 மணித்தியாலயம் நீர்த்தடை Reviewed by Editor on December 09, 2022 Rating: 5